News March 13, 2025
பிறந்தநாளன்று மாணவன் மரணம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 2ம் ஆண்டு படித்த இன்பராஜ்(21), கதிர்(21), ஆகியோர் டூவீலரில் சென்றனர். மாவடி விலக்கு பகுதியில் வந்தபோது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்புறம் இருந்த இன்பராஜ் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று அவரது பிறந்தநாள். படுகாயமடைந்த கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மானூர் போலீஸ் விசாரணை.
Similar News
News April 21, 2025
நெல்லை: உயர் கல்வி ஆலோசனை சிறப்பு எண்கள் அறிமுகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனை வழங்கவும் 95003 24417, 95005 24417 ஆகிய சிறப்பு எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டு கல்வி கடன் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார். *மாணவர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*
News April 21, 2025
நெல்லையில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் சோலார் நிறுவனத்தில் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளங்கலை அறிவியல்(BSC) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாத ஊதியமாக 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 21, 2025
பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

நெல்லை கேடிசி நகரை சேர்ந்தவர் ஜெப்ரின் சாமுவேல் (22). இவர் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் டக்கரம்மாள்புரம் அருகே சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.