News March 31, 2024
ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள், முகவர், அரசியல் கட்சியினருடனான தேர்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் தேர்தல் அலுவலர்ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலை வகித்தார்.
Similar News
News April 13, 2025
ஜெயங்கொண்டம்: அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் அருகே பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ந.சுகுமார் இயற்கை ஏய்தினார். அடைந்ததையடுத்து, நேற்று (ஏப்ரல்-12) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் நேரில் சென்று சுகுமாரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
News April 13, 2025
அரியலூர்: பிரகதீஸ்வரர் கோயில்

அரியலூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
News April 13, 2025
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

அரியலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ஆர்.சி. தூய மேரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் 470க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். போட்டிகள் 9,12,15 மற்றும் பொதுப் பிரிவுகள் என நடைபெறுகின்றன முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.