News March 13, 2025
நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மேலும் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்: உதகை 32 மி.மீ, குன்னூர் 55 மி.மீ, குந்தா 58 மி.மீ, கோத்தகிரி 45 மி.மீ, பர்லியாறு 43 மி.மீ.
Similar News
News March 4, 2026
கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் இவரா?

பந்தலூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் மாங்கோடு கா.ராஜா, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட இன்று சென்னை திமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கினார். மாவட்ட செயலாளர் கே.எம். ராஜு மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் RP. பரமேஷ்குமார் ஆகியோருடன் சென்று அவரை விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
News March 4, 2026
குன்னூர் அருகே விபத்து!

நீலகிரி மாவட்டம், குன்னூர் உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேலாஸ் பகுதியில் நேற்று மாலை 7, குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கெந்தளா நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி மற்றும் பேருந்தின் வலதுபக்க கண்ணாடி உடைந்தன. நல்வாய்ப்பாக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
News March 4, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்! முக்கிய தகவல்

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


