News March 13, 2025
3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி எரித்து கொலை

தி.மலையில் 3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி ஒருவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விருதாம்பாள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவத்தில் எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 22, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம்- ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற ஆக.29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2025- 2026-ம் கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார். இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்காக http://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News August 21, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு பொதுமக்கள் உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.