News March 13, 2025

தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி

image

கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா 27, இவர் ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று காலை கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் செல்லும் பொழுது தனியார் பஸ் பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில்,சம்பவ இடத்திலேயே பிரேமா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

Similar News

News March 14, 2025

விருத்தாசலம் அருகே ரயிலில் சிக்கி கள்ளக்குறிச்சி நபர் பலி

image

விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை அருகே,ரயில் பாதையோரம் கடந்த 12ஆம் தேதி காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், தலை சிதைந்த நிலையில் கிடந்தது.விருத்தாசலம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாலசுப்ரமணியன், 41, என்பது தெரியவந்தது.கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்

News March 13, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த்சிங் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!