News March 13, 2025
பிரதீப் ரங்கநாதனின் படத்தில் 3 நடிகைகள்?

‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவருடன் அனு இமானுவேல் மற்றும் ஐஸ்வர்யா ஷர்மாவும் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 14, 2025
இராமநாதபுரத்தில் ரூ.21கோடியில் நாவாய் அருங்காட்சியகம்

தமிழக அரசின் இறுதி பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமநாதபுரத்தில் சங்க கால பாண்டியர்களின் கடல் வாணிப சிறப்பை விளக்கும் வகையில் ரூ.21கோடியில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதி அறிக்கையில் தெரிவித்தார். *இராமநாதபுரத்திற்கு புதிய அடையாளம் உருவாதை ஷேர் செய்து ஊர் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
News March 14, 2025
ஒரு லட்சம் புதிய வீடுகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
News March 14, 2025
வரலாறு காணாத உச்சம்.. ₹66,000ஐ நெருங்கிய தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 14) சவரனுக்கு ₹880 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,230க்கும், சவரன் வரலாறு காணாத வகையில் ₹65,840க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரு கிராம் ₹2 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது.