News March 13, 2025
தினமும் நீங்க சிக்கன் சாப்பிடுறீங்களா?

சிக்கன் பிடிக்காத அசைவ பிரியர்களே இருக்க முடியாது. ஆனால், தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதயநோய் வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 13, 2025
‘இந்தி’ டியூசன் டீச்சருடன் உல்லாசமாக இருந்தவர் கைது!

சென்னை அருகே இந்தி டியூசனுக்கு சென்ற நபர், டீச்சருடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (33), 39 வயதான டீச்சரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் தனிமையிலிருந்துள்ளார். 6 வயது மூத்தவர் எனக் கூறி டீச்சரை விட்டுவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்யத் திட்டமிட்டதால், டீச்சர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததால் யோகேஸ்வரன் கைதாகியுள்ளார்.
News March 13, 2025
மாநில தனிநபர் வருமானம் அதிகரிப்பு

தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் ஆண்டு வருமானம் ₹2.78 லட்சமாக அதிகரித்துள்ளது; இது தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2025
இது நவீன இந்தித் திணிப்பு : அன்புமணி காட்டம்

சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு <<15744608>>இந்தியில் <<>>மட்டும் பதிலளிப்பதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது. இதற்கு எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழில் வாடிக்கையாளர் சேவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.