News March 13, 2025
TRAIN HIJACK: பணயக்கைதிகள் மீட்பு

பாகிஸ்தான் பயணிகள் ரயில் கடத்தல் சம்பவத்தில், சிக்கிய பணயக்கைதிகள் அனைவரையும் அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. அதன்படி, 346 பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 28 பாக்., ராணுவ வீரர்களும், 21 பணயக்கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News March 14, 2025
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்: புதின் ஏற்பு

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் உடன்பாடு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அதனை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, புதின் சம்மதிப்பார் என டிரம்ப் கூறியிருந்தார்.
News March 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 206 ▶குறள்: தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். ▶பொருள்: துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
News March 14, 2025
IMLT20: அரையிறுதியில் AUSயை வீழ்த்திய இந்தியா

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 அரையிறுதி ஆட்டத்தில் IND அணி AUSயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த IND அணி, யுவராஜ் (59), சச்சின் (42) உதவியுடன் 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, களமிறங்கிய AUS அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் நதீம்(4), வினய்(2), பதான்(2) ஆகியோர் வீக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் IND இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.