News March 13, 2025
கம்பீர் போடும் மெகா பிளான்.. ரோஹித்துக்கு சிக்கல்?

கம்பீரின் கவனம் முழுக்க 2026 டி20 WC, 2027 WTC, 2027 ODI WC தொடர்களில் தான் உள்ளதாம். இதற்கான அணிகளை தேர்வு செய்யும் மும்முரத்தில் அவர் உள்ளார். SKY தலைமையிலான தற்போதைய டி20 அணிதான், 2026 டி20 WCக்கும். வயது, ஃபிட்னஸ் காரணமாக ரோஹித் 2027 ODI WCயில் கேப்டனாக செயல்படுவது கஷ்டம். எனவே BCCI தரப்பில் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம். டெஸ்ட் அணி வீரர்களை தேர்வு செய்வதுதான் சவாலாக உள்ளதாம்.
Similar News
News August 6, 2025
வெள்ளத்தில் சிக்கி 11 வீரர்கள் மாயம்

உத்தரகாண்ட் மேகவெடிப்பால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், அங்கிருந்த ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. இதில் மீட்புபணிகளுக்குச் சென்ற 11 ராணுவ வீரர்கள் மாயமானதாக அஞ்சப்படுகிறது. அம்மாநிலத்தில் இன்று மதியம் 1:45 மணிக்கு மேகவெடிப்பு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 130 பேரை மீட்டுள்ளதாக அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
‘ராஞ்சனா’ ரி-ரிலீஸ்.. தனுஷ் வழக்கு

‘ராஞ்சனா’ படத்தின் கிளைமாக்ஸை AI வைத்து மாற்றி ரி-ரிலீஸ் செய்ததை எதிர்த்து தனுஷுடன் சேர்ந்து வழக்கு தொடர உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தெரிவித்துள்ளார். 2013-ல் வெளியான இப்படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால், அவர் உயிருடன் இருந்து மகிழ்ச்சியாக படம் முடிவது போல் தற்போது எடிட் செய்யப்பட்டுள்ளது. இது வலியை தருவதாக இருவரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
News August 6, 2025
USA vs ரஷ்யா: அணு ஆயுத போர்?

அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 500-5,500 கி.மீ., தொலைவில் அணு ஆயுதங்களை நிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்த விதிகளை மீறி ஐரோப்பியா, ஆசியாவில் அமெரிக்கா அணு ஆயுதங்களை நிறுத்தி ரஷ்யாவை அச்சுறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டிலேயே அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டது.