News March 13, 2025
மா.செ பட்டியலை வெளியிடுகிறார் விஜய்

தவெக இறுதிக்கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிடுகிறார். நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரித்துள்ள அவர், அதற்கு செயலாளர்களையும் அறிவித்து வருகிறார். ஏற்கெனவே, 95 மா.செ.கள் பட்டியல் வெளியான நிலையில், மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் அந்த மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து, அவர் பொறுப்புகளை வழங்குவார் எனத் தெரிகிறது.
Similar News
News August 6, 2025
ரஷ்யாவில் பாதுகாப்பு ஆலோசகர்

கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா அச்சுறுத்தி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது இந்த பயணம் அமைந்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இந்த மாத இறுதியில் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளார். டிரம்பின் வரி மிரட்டல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
News August 6, 2025
இந்தியாவிற்கு உரிமை உண்டு: ரஷ்யா

கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான அமெரிக்காவின் மிரட்டலுக்கு இடையே இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்துள்ளது. எந்தெந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு உண்டு எனவும், அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்கள் சட்ட விரோதமானது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும், 24 மணி நேரத்தில் இந்தியா மீது வரிவிதிப்பேன் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
ஆகஸ்ட் 6: வரலாற்றில் இன்று

*1945 – 2ம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியதில் 70,000 பேர் கொல்லப்பட்டனர். *1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ALH 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது. *2012- நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. *2019- முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்த நாள்.