News March 13, 2025
போஸ்ட் ஆபீஸ்களில் E-KYC மூலம் சேமிப்பு கணக்கு

போஸ்ட் ஆபீஸ்களில் E-KYC மூலம் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காகித பயன்பாட்டை குறைக்க ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்ததும் கணக்கு தொடங்கப்பட்டு விடும். இனி ஆவண நகல்களை காகிதமாக கொண்டு செல்ல வேண்டாம். முதலில் 20 தலைமை போஸ்ட் ஆபீஸ்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிறகு அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் கொண்டு வரப்படவுள்ளது.
Similar News
News March 13, 2025
ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சம்

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ₹65 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 உயர்ந்து ₹64,960க்கும், கிராமுக்கு ₹55 உயர்ந்து ₹8,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹110க்கும் விற்பனையாகிறது.
News March 13, 2025
தோனியின் க்ரேஸ்… தொடரும் CSKவின் ரெக்கார்ட் லிஸ்ட்!

இன்ஸ்டாவில் 17 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்ற முதல் IPL அணி எனும் பெருமையை CSK பெற்றுள்ளது. இந்த க்ரேஸுக்கு முக்கிய காரணம், தோனி என்ற சகாப்தம் அணியில் இருப்பதுதான். அவரை, தொடர்ந்து விளையாட வைக்கவே இந்த ஆண்டின் IPL விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் சென்னை அணியின் மவுசு கூடுகிறதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. வரும் 23 ஆம் தேதி CSK தனது முதல் போட்டியில் MI அணியை எதிர்கொள்கிறது.
News March 13, 2025
இந்தியா–மொரிஷியஸ் நெருக்கத்திற்கு என்ன காரணம்?

இந்தியா – மொரிஷியஸ் இடையே சுவாரஸ்யமான பந்தம் இருக்கிறது. அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையான 12 லட்சத்தில் 70% பேர் இந்திய வம்சாவளியினர். இது தான் அந்நாட்டுடன் இந்தியா நெருக்கமாக இருக்க முக்கிய காரணம். 2005 முதல் மொரிஷியஸின் மிகப் பெரிய வர்த்தக பார்ட்னராக விளங்குகிறது இந்தியா. இந்திய பெருங்கடலில் இரு நாட்டு இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதும் நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.