News March 13, 2025

மம்மியை அரெஸ்ட் பண்ணுங்க ஆபிஸர்..!

image

தனது ஐஸ்க்ரீமை சாப்பிட்ட தாய்க்கு எதிராக, 4 வயது சிறுவன் போலீசுக்கு போன் செய்த சுவாரஸ்ய சம்பவம் USAவில் நடந்துள்ளது. எனது மம்மி ரொம்ப மோசம், அவரை அரெஸ்ட் செய்ய வேண்டும் என அந்த சிறுவன் புகாரளித்துள்ளான். வீட்டிற்கு வந்து விசாரித்த போலீசார், உண்மை தெரிந்ததும், வேறு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து சிறுவனை சமாதானம் செய்துள்ளனர். மேலும், உதவிக்கு போலீஸை அழைக்க தெரிந்ததற்காக சிறுவனை பாராட்டினர்.

Similar News

News August 6, 2025

USA vs ரஷ்யா: அணு ஆயுத போர்?

image

அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 500-5,500 கி.மீ., தொலைவில் அணு ஆயுதங்களை நிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்த விதிகளை மீறி ஐரோப்பியா, ஆசியாவில் அமெரிக்கா அணு ஆயுதங்களை நிறுத்தி ரஷ்யாவை அச்சுறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டிலேயே அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டது.

News August 6, 2025

வள்ளலார் பொன்மொழிகள்

image

*எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். மனதை அடக்க நினைத்தால் அடங்காது, அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.

News August 6, 2025

கருண் நாயரின் கெரியர் முடிந்ததா?

image

ராஞ்சி டிராபியில் 863 ரன்கள் அடித்து, 9 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், IND vs ENG டெஸ்ட் தொடரில் கடுமையாக சொதப்பினார். இந்த தொடரில் வெறும் 205 ரன்களை மட்டுமே எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், தனது ஃபார்மை நிரூபிக்காததால், தேர்வுக்குழுவும், ரசிகர்களும் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இதனால் அடுத்து அணியில் இடம்பெறுவது கடினம் என்கின்றனர்.

error: Content is protected !!