News March 12, 2025
IPL: சிஎஸ்கே அணி போட்டி டிக்கெட் விலை ரூ.1.23 லட்சம்

IPLஇல் சேப்பாக்கத்தில் வரும் 23ஆம் தேதி நடக்கும் போட்டியில் மும்பை அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்காத போதிலும், சில இணையதளங்களில் மறைமுகமாக டிக்கெட் விற்பனை நடக்கிறது. இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.17,804 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.1.23 லட்சமாகவும் உள்ளது. நீங்கள் டிக்கெட் வாங்கி விட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News March 14, 2025
WPL: பைனலில் மும்பை

WPLல் குஜராத்துக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் MI வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த MI, மேத்யூஸ் (77), ஸ்கிவர் பிரண்ட் (77) ஆகியோரின் உதவியுடன் 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, களமிறங்கிய GG அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து, 19.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் 15ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
News March 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 14, 2025
பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணம்: நிர்மலா சீதாராமன்

மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது, அரசியலமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் உறுதிமொழிக்கு எதிரானது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக சாடிய அவர், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இது உள்ளதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.