News March 12, 2025
SBI UPI சேவைகள் முடங்கியது

நாடு முழுவதும் SBI வங்கியின் UPI சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் இதேபோல வங்கி சேவைகள் முடங்கின. பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பின் சுமூகமானது. அதேபோல, இன்று இரவு 7 மணி முதல் UPI சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கி இப்படி செயல்படலாமா என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு சேவை கிடைக்கிறதா? கமெண்ட்.
Similar News
News March 13, 2025
ரேவந்த் ரெட்டிக்கு நேரில் அழைப்பு!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா Ex CM நவீன்பட்நாயக், ஆந்திர Ex CM ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா CM ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
News March 13, 2025
4 மணி நேரத்தில் காயத்தை குணமாக்கும் ஹைட்ரோஜெல்

மனித தோலுக்கு ஒத்த பண்புகளை கொண்ட செயற்கைத்தோலை ஃபின்லாந்தின் ஆல்டோ பல்கலை., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹைட்ரோ ஜெல் என அழைக்கப்படும் இந்த பொருள், உடலில் ஏற்படும் காயத்தை 4 மணி நேரத்தில் 90% அளவுக்கு குணப்படுத்திவிடுமாம். அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக காயம் ஆறிவிடுமாம். இந்த புதிய கண்டுபிடிப்பு செயற்கைத்தோல் தொழில்நுட்பத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.
News March 13, 2025
இன்ஸ்டா பிரபலம் மோகத்தில் வாழ்க்கையை இழந்த பெண்!

இன்ஸ்டா மோகம் எவ்வளவு ஆபத்தில் முடியும் என்பதற்கு மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது இச்சம்பவம். கேரளாவில் இன்ஸ்டாவில் பிரபலமாக நினைத்த இளம்பெண் ஒருவர், ஹபீஸ் சஜீவ் என்ற இன்ஸ்டா பிரபலத்துடன் சேர்ந்து பல வீடியோக்கள் செய்துள்ளார். பெண்ணுடன் வீடியோ எடுக்க அவரது வீட்டுப் பக்கத்தில் குடிபெயர்ந்த ஹபீஸ், அவரை பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. பெண் அளித்த புகாரின் பேரில் ஹபீஸ் சஜீவை போலீசார் கைது செய்துள்ளனர்.