News March 12, 2025
விழுப்புரத்தில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

விழுப்புரம், டி.மேட்டுப்பாளையம் ஜெயந்திர சரஸ்வதி பள்ளி அருகில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி (ம) ஆராய்ச்சி மையத்தில் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி (SC/STமட்டும்) 14-03-2025, 15-03-2025, 17-03-2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News September 12, 2025
தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், தமிழ்நாடு தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை www.tntourismawards.com பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விபரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
விழுப்புரம்: அண்ணன் தங்கைகள் சாதனை

விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டை சேர்ந்தவர்கள் பரசுராமன்-தமிழ்செல்வி தம்பதியின் மூத்த மகன் சிவபாலன்,17; இவர் முட்டத்துார், பள்ளியில் +2 படிக்கிறார். இவரது தங்கை கனிஷ்கா,10;மற்றொரு தங்கை தீக்க்ஷா ,7; மூவரும் இந்தாண்டு நடந்த மாவட்ட, மாநில சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து, சாதனை படைத்துள்ளனர். மூவரையும் கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.