News March 12, 2025
குமரியில் வேலை தேடுவோர் கவனத்திற்கு

குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் பயோனியார் குமார் சுவாமி கல்லூரியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வினை நடத்துகிறது என ஆட்சியர் தெரிவித்தார். நண்பருக்கு பகிரவும்
Similar News
News September 12, 2025
குமரியில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்

ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம் ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை வாரி சங்கங்கள் இணைந்து நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
News September 11, 2025
குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

குமரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<
News September 11, 2025
குமரி: பட்டாசு கடை அமைக்க விண்ணப்பியுங்க…

குமரியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 10ம் தேதிக்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.