News March 12, 2025
பாஜகவில் சேரவில்லை.. சரத் ஆதரவாளர் அறிக்கை

பாஜகவில் தாம் சேரவில்லை என்று சரத்குமாரின் ஆதரவாளரும், சுரண்டை தொழிலதிபருமான எஸ்.வி. கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமக-வை பாஜகவுடன் சரத்குமார் இணைத்ததில் உடன்பாடு இல்லை என்றும், தாம் எந்த கட்சியிலும் தற்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் புளியங்குடியில் நடக்கும் பாஜக கூட்டத்தில் பங்கேற்போர் பெயர் பட்டியலில் தனது பெயரை அனுமதியின்றி போட்டதை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 12, 2026
IPL: அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவாரா?

டி20 WCல் சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு & துபே இருவரும் சிறப்பாக செயல்பட்டதால் தாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என அந்த அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அப்போது தோனி குறித்து பேசிய அவர், IPL 2026 சீசனின் அனைத்து போட்டிகளிலும் தோனி பங்கேற்பார்; அதேநேரம் அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவாரா? இம்பேக்ட் பிளேயராக விளையாடுவாரா? என்பதை அணி கிரிக்கெட் தலைமை முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.
News March 12, 2026
வீட்டு உபயோக LPG சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடா?

போர் காரணமாக LPG சிலிண்டர்களுக்கு தட்டுபாடு நிலவும் நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. LPG தட்டுப்பாடு காரணமாக வணிக சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது; வீட்டு உபயோக LPG சிலிண்டர்கள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும், வீட்டு நுகர்வோருக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி சிலிண்டர் தொடர்ந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
News March 12, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 12, மாசி 28 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்


