News March 12, 2025
முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சையது அபித் அலி (83) அமெரிக்காவில் காலமானார். இவர், 1967 முதல் 1974 வரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1,018 ரன்கள் குவித்து 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இவர் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்த இவர், ஓய்வு பெற்ற பின் அமெரிக்காவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பதற்காக அங்கே சென்று செட்டில் ஆகிவிட்டார்.
Similar News
News March 14, 2025
கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?

கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. மம்மூட்டி நடித்த ‘டொமினிக் & தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை தொடர்ந்து புதிய கதை ஒன்றை, ஜெயமோகனுடன் இணைந்து கெளதம் எழுதி வருகிறார். அண்மையில் கார்த்தியை நேரில் சந்தித்த கெளதம், கதையை சொல்ல, அது கார்த்திக்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்க சொன்னதாக கூறப்படுகிறது. கெளதம், கார்த்தி காம்போ எப்படி இருக்கும்?
News March 14, 2025
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்: புதின் ஏற்பு

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் உடன்பாடு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அதனை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, புதின் சம்மதிப்பார் என டிரம்ப் கூறியிருந்தார்.
News March 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 206 ▶குறள்: தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். ▶பொருள்: துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.