News March 12, 2025

நெல்லை: பிஷப் கால்டுவெல் வாழ்ந்த ஊர்

image

திசையன்விளை அருகே இடையன்குடியில் கால்டுவெல் நினைவு இல்லம் அமைந்துள்ளது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என கண்டுபிடித்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியவர் இவரே. அயர்லாந்திருந்து தன்னுடைய 24வது வயதில் இந்தியா வந்து 50 ஆண்டுகள் தங்கியிருந்து மொழி குறித்து ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதியுள்ளார். SHARE IT

Similar News

News August 25, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 24, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News August 24, 2025

நெல்லை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடு

image

நெல்லை டவுன் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பேசியதாவது: சதுர்த்தி விழா அமைதியாக கொண்டாட ஒத்துழைக்க வேண்டும். அரசு வகுத்துள்ள நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வைக்க, கரைக்க வேண்டும்.

error: Content is protected !!