News March 12, 2025
சில்லரை பணவீக்கம் சரிந்தது

பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளது. காய்கறிகள் மற்றும் இறைச்சியின் விலை குறைந்தது இந்த சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்குப் பின் கடுமையாக உயர்ந்த பணவீக்கத்தால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது, பணவீக்கம் குறைந்து வருவது, வங்கிகளின் வட்டி விகிதத்தையும் குறையச் செய்யும் என்கின்றனர் வல்லுநர்கள்.
Similar News
News March 14, 2025
இன்றைய பொன்மொழிகள்!

▶விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ▶கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் புரட்சி. ▶உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான். ▶ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ▶தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் புரட்சியாளன்.
– பிடல் காஸ்ட்ரோ.
News March 14, 2025
மருந்து தட்டுப்பாடு கூடாது; அமைச்சர் உத்தரவு

முதல்வர் மருந்தகங்களில் தட்டுப்பாடு இன்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவிட்டுள்ளார். மருந்தகங்களில் வாடிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துமாறும், கேட்கும் மருந்துகள் இல்லை என திருப்பி அனுப்பாமல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். தேவையான மருந்துகள் 48 மணி நேரத்துக்குள் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
News March 14, 2025
கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?

கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. மம்மூட்டி நடித்த ‘டொமினிக் & தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை தொடர்ந்து புதிய கதை ஒன்றை, ஜெயமோகனுடன் இணைந்து கெளதம் எழுதி வருகிறார். அண்மையில் கார்த்தியை நேரில் சந்தித்த கெளதம், கதையை சொல்ல, அது கார்த்திக்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்க சொன்னதாக கூறப்படுகிறது. கெளதம், கார்த்தி காம்போ எப்படி இருக்கும்?