News March 12, 2025
ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

ஆம்பூர் தாலுகா பணங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இனிய குமார் வயது (26). ஆட்டோ டிரைவரான இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்த வழக்கில், நேற்று திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மீனாகுமாரி ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News March 7, 2026
திருப்பத்தூர்: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

திருப்பத்தூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News March 7, 2026
திருப்பத்தூர் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

திருப்பத்தூர் மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967(அ)1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம்.உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!
News March 7, 2026
திருப்பத்தூர்: மாறிய நிலோபர்… மாறுமா வாணியம்பாடி?

கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சரானவர் நிலோபர். சமீபத்தில் நடந்த திமுக கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இவர் திமுகவில் இணைந்தார். தற்போது வாணியம்பாடி தொகுதி அதிமுக வசம் இருக்கும் நிலையில், நிலோபர் கபிலால் சிறுபான்மையினர் ஓட்டு திமுகவிற்கு விழ அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். வாணியம்பாடி திமுகவின் கோட்டை ஆகுமா இல்லை கனவோடுநிற்குமா?


