News March 12, 2025
மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு!

சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘காக்டெய்ல்’ நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் & தொழில்நுட்ப யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் பல லட்சம் பேருக்கு பயனளிக்கும். உலக அளவில் ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இருதய நோயால் இறப்பதாக US இருதய சங்க அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
Similar News
News March 13, 2025
வார விடுமுறை: 966 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, 966 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 14ஆம் தேதி 270 பஸ்கள், 15ஆம் தேதி 275 பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 20 பஸ்களும் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.
News March 13, 2025
UPI சேவைகள் முடக்கம்: SBI விளக்கம்

நாடு முழுவதும் SBI வங்கியின் <<15739560>>UPI சேவைகள்<<>> முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து விளக்கமளித்த எஸ்பிஐ, UPI பரிவர்த்தனைகளில் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தோல்வியடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், வாடிக்கையாளர்கள் UPI LITEஐ பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
News March 13, 2025
ODI WC-2027: ரோஹித்தின் முக்கிய முடிவு?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ODI WC-2027 வரை விளையாட முடிவு செய்துள்ள அவர், உடற்தகுதியில் கவனம் செலுத்த உள்ளார். இதற்காக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், அவரிடம் பேட்டிங் மற்றும் ஃபிட்னஸ் டிப்ஸ்களை பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அபிஷேக் IPLல், தினேஷ் கார்த்திக்கிற்கு வழிகாட்டியாக இருந்தார்.