News March 12, 2025
சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்ட 500 இந்தியர்கள் மீட்பு

மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்டிருந்த 500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த திங்களன்று 283 பேரும், நேற்று 266 பேரும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அதிக சம்பளத்தில் வேலை என்ற பொய் வாக்குறுதிகளை கூறி இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 13, 2025
WPL: வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி

WPL 2025ல் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இத்தொடரில் இதுவரை குஜராத் அணிக்கு எதிராக MI தோல்வியடைந்தது இல்லை. அதனால், இன்றைய போட்டி சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். மறுபுறம், டெல்லி அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. இறுதிப் போட்டி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
News March 13, 2025
Manicure பண்றீங்களா? உஷார்..!

Manicure எனப்படும் கைவிரல் நக ஒப்பனையை தொடர்ந்து செய்து வந்த பெண்ணின் விரல்களில், தோல் கேன்சருக்கான செல்கள் உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரல்களில் கோடு போன்று திடீரென உருவானதை கவனித்த அப்பெண், டாக்டரை அணுகியுள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், ‘0 melanoma’ என்ற தொடக்க நிலை தோல் புற்றுநோய்க்கான பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Manicure பண்ற உங்க தோழிகளுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 13, 2025
வார விடுமுறை: 966 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, 966 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 14ஆம் தேதி 270 பஸ்கள், 15ஆம் தேதி 275 பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 20 பஸ்களும் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.