News March 12, 2025
வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால் இதை செய்யுங்க..

பாம்புகள் கடுமையான வாசனைக்கு மிகவும் பயப்படும் என விலங்கியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பாம்பு வீட்டிற்குள் நுழைந்தால் வினிகர் அல்லது மண்ணெண்ணெய் தெளிக்க அவர்கள் அறிவுறுத்துகின்றனர். கூடுதலாக பூண்டு, எலுமிச்சை, இலவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை தூவினால் பாம்பு தானாகவே வெளியே ஓடிவிடும். அதேபோல், வெப்பநிலை மாற்றங்களுக்கும் அவை பயப்படும் என்பதால், புகையாலும் விரட்டலாம் என்கின்றனர்.
Similar News
News March 13, 2025
இன்றைய (மார்ச் 13) நல்ல நேரம்

▶மார்ச்- 13 ▶மாசி – 29 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM- 10:30 AM ▶திதி: பெளர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: திருவோணம் ▶நட்சத்திரம் : பூரம்.
News March 13, 2025
கம்பீர் போடும் மெகா பிளான்.. ரோஹித்துக்கு சிக்கல்?

கம்பீரின் கவனம் முழுக்க 2026 டி20 WC, 2027 WTC, 2027 ODI WC தொடர்களில் தான் உள்ளதாம். இதற்கான அணிகளை தேர்வு செய்யும் மும்முரத்தில் அவர் உள்ளார். SKY தலைமையிலான தற்போதைய டி20 அணிதான், 2026 டி20 WCக்கும். வயது, ஃபிட்னஸ் காரணமாக ரோஹித் 2027 ODI WCயில் கேப்டனாக செயல்படுவது கஷ்டம். எனவே BCCI தரப்பில் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம். டெஸ்ட் அணி வீரர்களை தேர்வு செய்வதுதான் சவாலாக உள்ளதாம்.
News March 13, 2025
மா.செ பட்டியலை வெளியிடுகிறார் விஜய்

தவெக இறுதிக்கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிடுகிறார். நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரித்துள்ள அவர், அதற்கு செயலாளர்களையும் அறிவித்து வருகிறார். ஏற்கெனவே, 95 மா.செ.கள் பட்டியல் வெளியான நிலையில், மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் அந்த மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து, அவர் பொறுப்புகளை வழங்குவார் எனத் தெரிகிறது.