News March 12, 2025
வடமாநிலங்களை TN உடன் ஒப்பிடலாமா? துரை வைகோ

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது வடமாநிலங்கள் 40 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் தாங்கள் கோரும் சில மாற்றங்களைச் செய்தால், அதில் கையெழுத்திடுவதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும், ஆங்கிலம் படித்ததால் தான் தமிழர்கள் உலகம் முழுவதும் கோலோச்சி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தங்கள் குழந்தைகளுக்கு இரு மொழியே போதுமானது என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 13, 2025
TRAIN HIJACK: பணயக்கைதிகள் மீட்பு

பாகிஸ்தான் பயணிகள் ரயில் கடத்தல் சம்பவத்தில், சிக்கிய பணயக்கைதிகள் அனைவரையும் அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. அதன்படி, 346 பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 28 பாக்., ராணுவ வீரர்களும், 21 பணயக்கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.
News March 13, 2025
இன்றைய (மார்ச் 13) நல்ல நேரம்

▶மார்ச்- 13 ▶மாசி – 29 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM- 10:30 AM ▶திதி: பெளர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: திருவோணம் ▶நட்சத்திரம் : பூரம்.