News March 12, 2025
சுற்றுலாத்தலமாக மாறிய Deep Seek நிறுவனரின் கிராமம்

CHAT GPT உள்பட பல AI தொழில்நுட்பங்களை பின்னுக்குத் தள்ளி, சீனாவை சேர்ந்த Deep Seek செயலி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக செயலியை உருவாக்கிய லியாங் வென்ஃபெங் பிரபலம் அடைந்த நிலையில், தற்போது அவரின் சொந்த கிராமமான மிலிலிங் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் அங்கு செல்கின்றனர். நினைவு சின்னமாக, அங்கிருந்து கற்களை எடுத்துச் செல்கின்றனர்.
Similar News
News August 23, 2025
செப்.1-ல் முடிவு.. RB உதயகுமார் அறிவிப்பு

யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் பலகட்ட ஆலோசனைகள் இருக்கும். ஆனால், கூட்டணி அமைத்தபிறகு பல குழப்பங்களுக்குள் சிக்கியுள்ளது அதிமுக. காரணம், நேற்று வரை EPS பெயரைக் குறிப்பிடாமல் ‘கூட்டணி ஆட்சி’ தான் என்கிறார் அமித்ஷா. மறுபக்கம் CM நாற்காலியில் EPS-ஐ அமரவைக்க வேண்டும் என சொல்கிறார் அண்ணாமலை. இந்நிலையில், இதுகுறித்து கேட்டதற்கு, ‘செப்.1-ல் EPS பதிலளிப்பார்’ என முடித்துவிட்டார் RB உதயகுமார்.
News August 23, 2025
இன்று ஒரே நாளில் ₹2,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹130-க்கும் கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ₹1000, நேற்று ₹2000, இன்று ₹2000 என மூன்றே நாளில் ₹5000 அதிகரித்துள்ளது. வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ள நிலையில், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.
News August 23, 2025
துலீப் டிராபி: கேப்டன் சுப்மன் கில் விலகல்?

துலீப் டிராபியின் வடக்கு மண்டல கேப்டன் சுப்மன் கில், தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம், அவரது உடல்நிலை விளையாடுவதற்கு தகுதியானதாக இல்லை என மருத்துவ அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாம். எனவே அவர் விலகினால், யாரை கேப்டனாக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே காயம் காரணமாக கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இருந்த <<17438673>>இஷான் கிஷன்<<>> விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.