News March 12, 2025
CM ஸ்டாலின் அழைப்பை ஏற்ற கர்நாடக CM சித்தராமையா!

தொகுதி மறுவரையறை குறித்த தென்மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, TN அரசின் சார்பில் அமைச்சர் பொன்முடி, கர்நாடகா CM சித்தராமையா, Dy CM சிவக்குமாரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது, மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். பின்னர், பேசிய பொன்முடி, அரசின் அழைப்பை ஏற்று, இருவரும் வரும் 22ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்தாகக் கூறினார்.
Similar News
News March 4, 2026
சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது. நேற்று மொத்த விலையில் முட்டை ஒன்று ₹4.60-க்கு விற்பனையான நிலையில், இன்று 30 காசுகள் குறைந்து ₹4.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக துபாய், கத்தார், ஓமன் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டதால், விலை கணிசமாக சரிந்துள்ளது.
News March 4, 2026
அய்யா வைகுண்டர் வழியில் திமுக ஆட்சி: ஸ்டாலின்

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து, கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபம் போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள் என்றவர். தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் எனும் அய்யா வைகுண்டர் கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாக கொண்டு திமுக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
News March 4, 2026
ஆயுதப் படையில் 349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு https://upsc.gov.in/ தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தேர்வு ஜூலை 19-ம் தேதி நடைபெறும்.


