News March 12, 2025
காந்தி சிலைக்கு அமைச்சர் மரியாதை

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் முழு உருவச்சிலை புனரமைக்கப்பட்டு நூலகமாக அமைக்கப்பட்டது. இந்நிலையில் காந்தியடிகளின் சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 11, 2025
ஈரோடு அருகே சிக்கிய முதியவர்.. போலீசார் அதிரடி!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள வெள்ளியம்பாளையத்தில் வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக பவானிசாகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த வீட்டை போலீசார் சோதனை செய்ததில், 102 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அந்த நபர் பவானிசாகர் வில்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (61) என்பது தெரியவந்தது.
News September 11, 2025
ஈரோடு: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

ஈரோடு மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<
News September 11, 2025
ஈரோட்டில் 2ம் பருவ பாடப்புத்தகம் வருகை!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் வரும் 26ஆம் தேதி நிறைவடைகின்றன. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 3ஆம் தேதி முதல் இரண்டாம் பருவம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 11,738 புத்தகங்களும், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 11,739 புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.