News March 12, 2025
திருவள்ளூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, திருவள்ளூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (மார்.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக திருவள்ளுர் வட்டடத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் 3 மணிக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைத்து வந்துவிடுங்கள்.
Similar News
News March 11, 2026
ஆவடி வருகிறார் சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சியின் ஆவடி தொகுதி வேட்பாளர் அறிமுகம் பொதுக் கூட்டம் வரும் மார்ச் 13ஆம் தேதி ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலையம் அருகே நடைபெற உள்ளது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிைைணப்பாளர் சா.பாத்திமா பர்ஹானா கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News March 11, 2026
ஆவடி அருகே கணவரை படுகொலை செய்த இளம்பெண்!

திருவள்ளூர்: ஆவடி, கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39), மனைவி மகேஸ்வரி(29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் போதையில் வந்த அவர் மகேஸ்வரியின் தாலியை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்தவர், அருகே இருந்த கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில், ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மகேஸ்வரியை கைது செய்த போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
News March 11, 2026
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


