News March 12, 2025
பெரம்பலூர் அருகே ஓடையில் மூழ்கி வாலிபர் பலி

பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தில் முத்து 28. அவரது தாயார் ராகிணி இருவரும் அதே ஊரில் உள்ள ஓடையில் மீன் பிடிக்க சென்றனர். முத்து விரித்த வலையில் சிக்கிய மீன்களை பிடிக்க, தண்ணீரில் கேன் மீது அமர்ந்து மீன்களை பிடித்தனர்.அப்போது எதிர்பாராதவிதம முத்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News September 11, 2025
சிறுபான்மையினருக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், சிறுபான்மையின மக்களின் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறியவும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜோ.அருண் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 141 பயனாளிகளுக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
News September 11, 2025
முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்

இன்று (11.09.2025) பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை மற்றும் பென்னகோணம் ஊராட்சி களுக்கு திருமாந்துறை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடைன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் திடீரென போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.
News September 11, 2025
பெரம்பலூர்: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !