News March 12, 2025
புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500ஆக உயர்வு

புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் <<15732122>>உரிமைத்தொகை <<>>₹1000லிருந்து ₹2500ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில CM ரங்கசாமி அறிவித்துள்ளார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும். முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ₹20,000ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
நாடு முழுவதும் SIR நடைபெறும்: ECI விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (Special Intensive Revision- SIR) நாடு முழுவதும் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டில் ECI அறிவித்துள்ளது. பிஹாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் இப்போது நடத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவின் விசாரணையில் ECI இதை தெரிவித்தது. பிஹாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த சரிபார்ப்பு செயல்முறை நடத்தப்படும் அது விளக்கம் அளித்துள்ளது.
News July 10, 2025
ரோபோ சங்கர் மகள் கூறியது அனைத்தும் தவறே: TN அரசு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு சிந்தனை திறன் தற்போது குறைந்துவிட்டதாக ரோபோ சங்கர் மகளும் அவரது கணவரும் தெரிவித்த கருத்து ஆதாரமற்றது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. யூடியூப் சேனலில் அவர்கள் தெரிவித்துள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானது என்றும், Right Brain activation & ஹெகுரு பயிற்சிகளுக்கு மத்திய அரசு எந்தவித பட்ஜெட்டும் ஒதுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.