News March 12, 2025
இதை செய்யாவிட்டால் career காலி.. பும்ராவுக்கு வார்னிங்

BGT தொடரின் போது காயமடைந்ததால் பும்ராவால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான அவருக்கு நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில், நீண்ட நாள்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றால், 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் தொடர்ந்து விளையாடக்கூடாது எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2026
தோல்வியை நோக்கி செல்லும் இந்தியா

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாறி வருகிறது. இன்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 105/6 ரன்கள் எடுத்தது. ஏற்கெனவே இந்தியா முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மறுபுறம் ஆஸ்திரேலியா சதர்லேண்டின் சதத்தால் முதல் இன்னிங்சில் 323 ரன்களை எடுத்தது. 2 இன்னிங்ஸையும் சேர்ந்து சதர்லேண்ட் 6 விக்கெட்களை வீழ்த்தி பவுலிங்கிலும் அசத்தியுள்ளார்.
News March 7, 2026
மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 7, 2026
BREAKING: சம்பள உயர்வு.. அறிவித்தது தமிழக அரசு

மே மாதம் முதல் மருத்துவத் துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் மூலம், 41,000 ஊழியர்களுக்கு 2026- 27-ம் ஆண்டுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்றும் இதன்மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ₹169 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு ஊதிய உயர்வு என்ற விவரங்களுடன் விரைவில் அரசாணை வெளியாகும்.


