News March 12, 2025
தமிழக கல்வி முறையை சீர்குலைக்காதீங்க: அன்பில்

NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இருமொழி அடித்தளத்துடன் செயல்படும் தமிழ்நாட்டில் 1,635 CBSE பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால்,1.09 கோடி மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தில் பயின்று வருகின்றனர். இதன் மூலம் மக்கள் எந்த கல்வி முறையை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2025
பணவீக்க குறைவு வட்டி விகிதத்தை குறைக்கும்

கோவிட்டிற்கு பின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததால், ரெப்போ வட்டி விகிதத்தை RBI உயர்த்தியது. இதனால், வங்கிகளில் லோன் வாங்குவோர்/வாங்கியோர் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளதால், RBI ரெப்போ வட்டியை குறைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், நீங்கள் வாங்கிய வீட்டுக்கடனின் வட்டியும் குறையும், இனி நீங்கள் வாங்கப் போகும் லோனின் வட்டியும் குறையும்
News March 12, 2025
சாதி அடையாளத்தை அழித்த கலெக்டர்!

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் 11ஆம் வகுப்பு மாணவன் தேவேந்திரனை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவன் படித்த பள்ளிக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் இன்று சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி சுவர்களில் சில சாதி அடையாளங்கள் வரையப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், மாணவர்களை வைத்தே அதை அழிக்கச் செய்தார்.
News March 12, 2025
2025 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 1.05 லட்சத்தை தாண்டும்?

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பங்குச்சந்தை முதலீடு கணிப்பு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, சென்செக்ஸ் 2025 டிச.க்குள் 1.05 லட்சத்தை தாண்டும் என கூறியுள்ளது. இது தற்போதைய நிலவரத்தை விட 41% அதிகம். இதேபோல், 2024 டிசம்பரிலும் அது கணித்திருந்தது. உலக அரசியல் சில நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்குமெனவும் தெரிவித்துள்ளது.