News March 12, 2025

பிரபல பாடகர் கோகோ டீ காலமானார்

image

ஜமைக்காவைச் சேர்ந்த ரெக்கே (Reggae) ஜாம்பவான் பாடகர் கோகோ டீ (65) காலமானார். 2019 முதல் புற்றுநோயால் கடும் அவதியடைந்து வந்த அவரது உயிர் பிரிந்துவிட்டதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ரைக்கர்ஸ் ஐலேண்ட், யங் லவர், ஹரி அப் & கம் உள்ளிட்ட பாடல்களால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். கோகோ டீ மறைவுக்கு இசைப் பிரியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIPCocoaTea

Similar News

News March 12, 2026

கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல்: EPS

image

திமுக கூட்டணியில், அதன் கூட்டணிக் கட்சிகள் அடிமையாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மோசமான, கையாலாகாத திமுக அரசை அகற்றுவதே அதிமுக கூட்டணியின் நோக்கம் என்றார். இந்த தேர்தல் தான் கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல் எனவும் கூறினார். மேலும், காங்கிரஸிடம் கெஞ்சி திமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News March 12, 2026

ராசி பலன்கள் (12.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

முடிவுக்கு வரும் போர்? டிரம்ப் சிக்னல்

image

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளை USA, இஸ்ரேல் இணைந்து பெருமளவில் அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி அங்கு தாக்குதல் நடத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தான் விரும்பும் நேரத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நினைத்ததை விட அதிக சேதாரத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

error: Content is protected !!