News March 12, 2025
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்காவின் ‘Second Lady’

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை அதிபராக பதவியேற்றப் பிறகு தனது முதல் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது பயணமாக இந்தியா வரவுள்ளார். அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது மனைவி உஷா, அமெரிக்காவின் ‘Second Lady’-ஆக இந்தியா வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 12, 2025
SBI UPI சேவைகள் முடங்கியது

நாடு முழுவதும் SBI வங்கியின் UPI சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் இதேபோல வங்கி சேவைகள் முடங்கின. பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பின் சுமூகமானது. அதேபோல, இன்று இரவு 7 மணி முதல் UPI சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கி இப்படி செயல்படலாமா என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு சேவை கிடைக்கிறதா? கமெண்ட்.
News March 12, 2025
83,668 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) எம்பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், டிஜிட்டல் அரெஸ்டுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகள், 3,962 ஸ்கைப் ஐடிக்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்தால் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
News March 12, 2025
‘வட சென்னை 2’-ல் தனுஷ் இல்லையா?

தனுஷ் உடனான மோதல் காரணமாக, ‘வட சென்னை 2’ படத்தை வேறு இயக்குநர், வேறு நடிகரை வைத்து தயாரிக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. வெற்றிமாறனின் உதவி இயக்குநர் கார்த்திகேயன் இப்படத்தை இயக்க, மணிகண்டன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘வட சென்னை’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட, ‘அசுரன்’ படத்தை எடுக்க வெற்றிமாறனை தனுஷ் நிர்பந்தித்தாகவும் ஒரு பேச்சு உள்ளது.