News March 12, 2025

நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

image

வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது நர்சிங் மாணவி. இம்மாணவியை கொடநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியரசன் ( 20) என்பவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்து, மாணவியை கர்ப்பமாக்கி உள்ளார். புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் நேற்று மதியரசன் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 22, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்- ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற ஆக.29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2025- 2026-ம் கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார். இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்காக http://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News August 21, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு பொதுமக்கள் உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!