News March 12, 2025

ராசி பலன்கள் (12.03.2025)

image

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – ஓய்வு ➤மிதுனம் – நிறைவு ➤கடகம் – பாராட்டு ➤ சிம்மம் – நலம் ➤கன்னி – இன்பம் ➤துலாம் – அசதி ➤விருச்சிகம் – பக்தி ➤தனுசு – லாபம் ➤மகரம் – ஆக்கம் ➤கும்பம் – தனம் ➤மீனம் – களிப்பு.

Similar News

News March 12, 2025

மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு!

image

சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘காக்டெய்ல்’ நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் & தொழில்நுட்ப யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் பல லட்சம் பேருக்கு பயனளிக்கும். உலக அளவில் ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இருதய நோயால் இறப்பதாக US இருதய சங்க அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

News March 12, 2025

இன்டர்நெட் பயனாளர்கள் 80 கோடியாக அதிகரிப்பு

image

இந்தியாவில் 80 கோடி பேர் இணையதள வசதியை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2025 ஜனவரி நிலவரப்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடி என்றும், அவர்களில் 53 கோடி பேர் வாட்ஸ்அப், 49 கோடி பேர் யூடியூப், 41 கோடி பேர் இன்ஸ்டாகிராம், 38 கோடி பேர் பேஸ்புக், 24 கோடி பேர் X ஆகிய தளங்களை பயன்படுத்துகின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் எதை அதிகம் பயன்படுத்துவீர்கள்?

News March 12, 2025

சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்ட 500 இந்தியர்கள் மீட்பு

image

மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்டிருந்த 500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த திங்களன்று 283 பேரும், நேற்று 266 பேரும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அதிக சம்பளத்தில் வேலை என்ற பொய் வாக்குறுதிகளை கூறி இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!