News March 12, 2025
அரசுப் பஸ்களில் இனி கண்டக்டர் வேலை இல்லை

அரசுப் பஸ்களில் இதுவரை டிரைவர்கள், கண்டக்டர்கள் என தனித்தனி ஆட்தேர்வு நடைபெற்றது. இனி நிரந்தர பணிக்கு கண்டக்டர் என தனியாக ஆட்தேர்வு செய்வதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது. டிரைவர், கண்டக்டர் ஆகிய 2 உரிமங்கள் வைத்திருப்போரையே தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. எஸ்இடிசியில் 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் பஸ்களில் இம்முறை ஏற்கெனவே உள்ளது. இனி மாநகரப் பேருந்துகளிலும் இது அமலாகவுள்ளது.
Similar News
News March 12, 2025
மும்மொழிக் கொள்கைக்கு அண்ணா ஆதரவு?

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால் மும்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார். ஹிந்தியை தீவிரமாக எதிர்த்து ஆட்சியதிகாரம் பெற்ற அண்ணா குறித்து டிடிவி இவ்வாறு பேசியிருப்பது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக என இரு கட்சியினரும் டிடிவியை வசைபாடி வருகின்றனர். இவரது பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
News March 12, 2025
25ஆவது படம் பிளாப்.. ஆனாலும் கலங்காத ஜிவி

தனது 25ஆவது படமான ‘கிங்ஸ்டன்’ சரியாக போகவில்லை என ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும், ஒரு படம் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா, தனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை யோசிக்காமல் கடினமாக உழைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது 20 ஆண்டுகால சினிமா அனுபவமும் தனக்கு இதைத்தான் கற்றுக்கொடுத்ததாக கூறியுள்ளார்.
News March 12, 2025
வேகமெடுக்கும் நடவடிக்கைகள்: எழுச்சி பெறுமா டிடி?

மக்களை தற்போது பெரிதும் ஈர்க்காத சேனலாக இருக்கும் தூர்தர்ஷனை, மீண்டும் பிரபலமடைய வைக்க பிரசார் பாரதி முயன்று வருகிறது. அதற்காக, ஹிந்தி தொலைக்காட்சிகளில் முக்கிய தொகுப்பாளராக இருக்கும் சுதிர் சவுத்ரி என்பவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ₹14 கோடி செலவில் சேனலின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மீண்டும் எழுச்சி காணுமா டிடி சேனல்?