News March 11, 2025
நாடாளுமன்ற அமர்வுகள் 13ஆம் தேதி ரத்து

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வருகிற 14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 13ஆம் தேதியும் 2 அவைகளிலும் அமர்வுகளையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மக்களவை வருகிற 29ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2025
2027 உலகக் கோப்பையே ரோஹித்தின் இலக்கு: பாண்டிங்

2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட ரோஹித் ஷர்மா விரும்புவதாக ஆஸி., அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 2023இல் உலகக் கோப்பையில் IND தோல்வி அடைந்ததால், 2027இல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். T20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ODI உலகக் கோப்பையை தனது தலைமையில் வெல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 12, 2025
நேபாளத்தில் ட்ரெண்டாகும் யோகி ஆதித்யநாத்!

நேபாள் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷாவை வரவேற்க, முடியாட்சி ஆதரவு இயக்கம் (RPP), அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் பேரணி நடத்தியது. அதில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. 2025 ஜனவரியில் முன்னாள் அரசர் ஷா, உ.பி வந்த போது யோகியை சந்தித்தார். ஆனால், RPPக்கு கெட்ட பெயரை உண்டாக்க ஆளும் அரசால் செய்யப்பட்ட சதி இது என RPP குற்றஞ்சாட்டியுள்ளது.
News March 12, 2025
விரைவில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்கள்

3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மாநிலம் முழுவதும் 2026ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனையடுத்து, ₹20,000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் மின் கணக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும்.