News March 11, 2025
CT தொடர் நாயகன் விருது: அஸ்வின் அப்செட்

CT தொடர் நாயகன் விருதை வருண் சக்ரவர்த்திக்கு கொடுத்திருக்க வேண்டும் என அஸ்வின் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய வித்தியாசத்தை யார் ஏற்படுத்தினார்களோ, அவருக்குத்தான் அந்த விருதை வழங்க வேண்டும் எனவும், அதற்கு வருண் தான் தகுதியானவர் என்றும் அவர் கூறியுள்ளார். 4 போட்டிகளில் 263 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திராவுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. ஆனால் 3 போட்டிகளில் வருண் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Similar News
News March 12, 2025
நேபாளத்தில் ட்ரெண்டாகும் யோகி ஆதித்யநாத்!

நேபாள் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷாவை வரவேற்க, முடியாட்சி ஆதரவு இயக்கம் (RPP), அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் பேரணி நடத்தியது. அதில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. 2025 ஜனவரியில் முன்னாள் அரசர் ஷா, உ.பி வந்த போது யோகியை சந்தித்தார். ஆனால், RPPக்கு கெட்ட பெயரை உண்டாக்க ஆளும் அரசால் செய்யப்பட்ட சதி இது என RPP குற்றஞ்சாட்டியுள்ளது.
News March 12, 2025
விரைவில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்கள்

3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மாநிலம் முழுவதும் 2026ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனையடுத்து, ₹20,000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் மின் கணக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும்.
News March 12, 2025
120 கோடியை நெருங்கும் செல்போன் பயனர்கள்

நாட்டில் செல்போன் பயனர்கள் எண்ணிக்கை 120 கோடியை நெருங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாத செல்போன் பயனர்கள் எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில் நாடு முழுவதும் மொத்தம் 118 கோடியே 99 லட்சம் பயனாளர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் எண்ணிக்கை 50.4%, ஏர்டெல் பயனர்கள் எண்ணிக்கை 30.6%, வோடாபோன் பயனர்கள் எண்ணிக்கை 13.4% எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.