News March 11, 2025

கூகுளை மிரட்டும் சீனாவின் அதிவேக கம்ப்யூட்டர்!

image

உலகிலேயே மிக வேகமானதாக கருதப்பட்ட கூகுளின் அதிவேக குவாண்டம் கம்ப்யூட்டரை விட, அதிவேகமான ‘ஜுச்சோங்ஷி – 3’ கம்ப்யூட்டரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இது சூப்பர் கம்ப்யூட்டர்களின் தொழில்நுட்பத்துறையில் புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசர்களை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு வேகத்தில் இது இயங்குமாம்.

Similar News

News March 12, 2025

சுற்றுலாத்தலமாக மாறிய Deep Seek நிறுவனரின் கிராமம்

image

CHAT GPT உள்பட பல AI தொழில்நுட்பங்களை பின்னுக்குத் தள்ளி, சீனாவை சேர்ந்த Deep Seek செயலி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக செயலியை உருவாக்கிய லியாங் வென்ஃபெங் பிரபலம் அடைந்த நிலையில், தற்போது அவரின் சொந்த கிராமமான மிலிலிங் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் அங்கு செல்கின்றனர். நினைவு சின்னமாக, அங்கிருந்து கற்களை எடுத்துச் செல்கின்றனர்.

News March 12, 2025

ICC ODI பேட்டிங் தரவரிசை: இந்திய வீரர்களின் ஆதிக்கம்!

image

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை அடுத்து ICC வீரர்களுக்கான ODI தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சுப்மன் கில் முதல் இடத்தையும், கேப்டன் ரோஹித் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், கோலி 5வது இடத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் 8வது இடத்தில், கே.எல்.ராகுல் 16வது இடத்திலும் இருக்கின்றனர். ‘இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் பேட்டிங் அணி இதுதான்’ என பலரும் பாராட்டி வருகின்றனர்.

News March 12, 2025

மனைவியுடன் சண்டை… 450 கி.மீ நடந்து போன கணவர்!

image

இத்தாலியில் ஒரு தம்பதிக்கு பெரிய சண்டை வெடித்துள்ளது. தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு கணவர் வீட்டில் இருந்து வாக்கிங் கிளம்பி இருக்கிறார். புலம்பியபடியே நடந்தவர், 450 கி.மீ நடந்துவிட்டார். அது கொரோனா டைம் என்பதால், போலீஸ் அவரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பியுள்ளது. இல்லை’னா நாட்ட தாண்டி போயிருப்பார் போல. உங்க வீட்டில் மனைவியுடன் சண்டை வந்தால், நீங்க என்ன பண்ணுவீங்க!

error: Content is protected !!