News March 11, 2025
கனமழையால் வனப்பகுதிக்கு செல்ல தடை விதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. மாவட்ட ஆட்சியரும் இன்று பொதுமக்களுக்கு அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காளிகேசம் சுற்றி உள்ள மலை பகுதியில் அதிகமான மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா தலமான காளிகேசம் செல்ல பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
Similar News
News March 12, 2025
குமரி சுற்றுலாத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்க கோரிக்கை

குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்க பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். “இயற்கை எழில் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட மத்திய அரசு முன் வரவேண்டும்; அதற்காக சிறப்பு நிதியாக ரூபாய் 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளர்.
News March 12, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.15 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 175 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 52 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
News March 12, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(மார்ச் 12) காலை 10 மணிக்கு அரசின் சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கு விரிவுபடுத்தி அரசாணை வழங்க கேட்டு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு ஓய்வூதியர்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேப்பமூடு பூங்கா முன்பு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.