News March 31, 2024
திருவள்ளூர்: வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் நாசர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28-ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நாசரிடம் கத்தி முனையில் ரூ.1000-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து நாசர் அளித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, சக்தி மற்றும் கிஷோர் குமார் ஆகிய மூவரை திருவேற்காடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 24, 2025
திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
ஆவடியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

ஆவடியில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
திருவள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எலெட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் & மெக்கானிக்கல் பிரிவில் ITI படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <