News March 11, 2025

மதுரையில் நில அளவீடு இணையத்தில் விண்ணபிக்கலாம்

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்த <>லிங்கை <<>>பயன்படுத்தலாம். நில சம்பந்தபட்ட தொழில் செய்பவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News April 20, 2025

மதுரையில் 613 உணவகங்களுக்கு நோட்டீஸ்

image

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 613 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக RTI-ல் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 51 உணவகங்கள் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ததாக நீதிமன்றம் மூலம் சுமார் 108 உணவக உரிமையாளர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

News April 20, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (20.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2025

மதுரை மக்களே எச்சரிக்கை

image

மதுரையில் நாளை ஏப்.21 முதல் ஏப்.26ஆம் தேதி வரை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குளிர்ச்சியான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!