News March 11, 2025

குமரி கலெக்டர் வேண்டுகோள்!

image

குமரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘TN ALERT’ செயலியின் வழியாக மழை விவரங்களை தெரிந்து கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News September 12, 2025

குமரியில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்

image

ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம் ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை வாரி சங்கங்கள் இணைந்து நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

News September 11, 2025

குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

குமரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 11, 2025

குமரி: பட்டாசு கடை அமைக்க விண்ணப்பியுங்க…

image

குமரியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 10ம் தேதிக்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!