News March 11, 2025
ராமநாதபுரம்: கனமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க

ராமநாதபுரத்தில் மிக கனமழை பாதிப்புகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும். கட்டணமில்லா உதவி எண்:1077, தொலைபேசி எண்:04567- 230060, எண்ணிலும் தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். *குழந்தைகளை பாதுக்காப்பாக கவனித்துக்கொள்ள அறிவுறுத்தல்* கட்டாயம் ஷேர்
Similar News
News April 20, 2025
வழிவிடு முருகன் ஆலயத்தில் திரைப்பட பூஜை துவக்கம்

சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி மகன் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் போர்கள் ஓய்வதில்லை திரைப்பட பூஜை ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருட்டுக்கு கண் இருக்கு உள்பட குறும்பட யூடியூப் நடிகர் மண்டபம் எம் எஸ் ராஜ், அமமுக தலைமை கழக பேச்சாளர் மண்டபம் ராஜா முஹமது உள்பட பலர் பங்கேற்றனர்.
News April 20, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News April 19, 2025
இராமநாதபுரம்: கோடை கால இலவச பயிற்சி முகாம் – ஆட்சியர்

இராமநாதபுரம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை (21 நாட்கள்) காலை, மாலை இரு வேளைகள் நடைபெறும். இதில், தடகளம், ஹாக்கி, டென்னீஸ், இறகுப்பந்து, ஜூடோ, இதர விளையாட்டுகளுக்கு இலவச பயிற்சி & அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும் – ஆட்சியர் (18 வயதிற்குட்பட்டவர்கள்)*ஷேர் பண்ணுங்க