News March 31, 2024
தூத்துக்குடியில் தேர்வில் மாற்றம்

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Similar News
News February 18, 2026
தூத்துக்குடி: விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை

தூத்துக்குடியில் சாம்பல் புதன் வழிபாட்டையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. இதன் காரணமாக பனிமய மாதா, திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. 272 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
News February 18, 2026
தூத்துக்குடி வந்தே பாரத் துறையில் பரிந்துரை

தமிழகத்தில் எட்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை – தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. சென்னை தூத்துக்குடி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் பயனிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
News February 18, 2026
தூத்துக்குடியில் குடிநீர் தொடர்பாக புகார் அளிக்க..!

மாவட்ட அளவிலான உதவி மையம்: 7402908492
தூத்துக்குடி : 7402608553
கோவில்பட்டி : 7405608567
கருங்குளம் : 7402608555
திருவைகுண்டம் : 7402608557
ஆழ்வார்திருநகரி : 7402608559
உடன்குடி : 7402608563
திருச்செந்தூர் : 7402608561
சாத்தான்குளம் : 7402608565
கயத்தாறு : 7402608569
ஓட்டப்பிடாரம் : 7402608571
விளாத்திகுளம் : 7402608573
புதூர் : 7402608575


