News March 11, 2025

திருவள்ளூர் அருகே தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

தண்டலச்சேரி கிராமத்தில் வசித்தவர் ரமேஷ்பாபு, 57. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் சிலாப்பில் இருந்த பொருளை எடுப்பதற்காக, கட்டில் மீது ஏறினார்.அப்போது, தவறி விழுந்தவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவு இழந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்,இதுகுறித்து போலீசார் விசாரணை.

Similar News

News August 28, 2025

திருவள்ளூரில் அரசு வேலை.. 80 காலிப்பணியிடங்கள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திருவள்ளூரில் 80 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு<> இங்கு கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

திருவள்ளூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

image

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர், ரோஜா தெரு பகுதியில் நேற்று காலை சாலையில் நடந்த சென்ற சிறுவன் நிஷாந்தை (6) தெரு நாய் துரத்தி அவரது கால், கைகளில் கடித்துள்ளது. பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

News August 28, 2025

திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540105>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!