News March 11, 2025
புதிய மாவட்டம் உருவாகிறது?

திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக உருவாகும் பழநி மாவட்டத்துடன் இணைய மாட்டோம் என்று உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், கொடைக்கானல் திண்டுக்கல்லுடன் இருக்க வேண்டும் என்றும், பழநியுடன் இணைக்கக் கூடாது எனவும் குரல் எழுப்பியுள்ளனர்.
Similar News
News March 12, 2025
தமிழர்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்: சு.வெங்கடேசன்

பாஜகவின் எதேச்சதிகாரப் போக்குக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். காசித் தமிழ் சங்கத்திற்கு நிதியளிப்பதில் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தமிழகத்துக்கு கல்விக்கு பணம் தருவதில் BJP அரசு காட்டாதது ஏன் எனவும் வினவியுள்ளார். பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும், பகுத்தறிவும் கொண்ட தமிழர்கள் பாஜகவுக்கு செய்ய வேண்டியதை செய்வார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
News March 12, 2025
சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்வு!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை நேர வர்த்தகப்படி சற்று உயர்வைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்து 74,270ஆகவும், நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 22,536ஆகவும் வர்த்தகமாகிறது. இதனால், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்து ₹87.22 ஆக உள்ளது.
News March 12, 2025
அப்பா என்றால் சிலருக்கு கசப்பு : சந்துரு தாக்கு

மத்திய பாஜக அரசை திடமாக எதிர்க்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஒரு தேசம், ஒரு தேர்தல் எனக்கூறி தனக்குத் தானே முடிசூட்டிக் கொள்ள ஒரு தலைவர் தயாராகி கொண்டிருக்கிறார் என மோடியை விமர்சித்த அவர், மாணவர்களுக்கு காலை உணவு அளிப்பவரை அப்பா என்று சொன்னால் என்ன தவறு. அப்பா என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு கசப்பாக இருக்கிறது என சாடியுள்ளார்.