News March 11, 2025
குமரியில் மிக கனமழை – கலெக்டர் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் இன்று(மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின் சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின் கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.* நண்பர்களை உஷார் படுத்தவும்*
Similar News
News September 11, 2025
குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

குமரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<
News September 11, 2025
குமரி: பட்டாசு கடை அமைக்க விண்ணப்பியுங்க…

குமரியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 10ம் தேதிக்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
குமரி: விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழி மாற்றம்

சிங்கவனம் – கோட்டையம் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இவ்வழிதடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 20ம் தேதி மாலை 5:20 மணிக்கு புறப்படுவது ஆலப்புழா வழியாக செல்லும். சிங்களூர் கோட்டயம் செல்லாது நாகர்கோவில் கோட்டயம் ரயில். இம்மாதம் 20ம் தேதி புறப்படுவது சங்கனாச்சேரி கோட்டயம் இடையே ரத்து செய்யப்படுகிறது.